எம்மைப் பற்றி

அச்சிடுக

அரசியலமைப்புக்கான (1987) பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழ் இந்த நிதி ஆணைக்குழு தாபிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு நிதி ஆணைக்குழுவின் தாபிப்பானது மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் ஒழுங்குறுத்துகை முறைமைக்கான ஒரு முக்கிய கொள்கை ஆவணத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. மேலும் நிதி ஆணைக்குழுவின் தாபிப்பானது மாகாண நிதி விடயத்தில் மாகாண மையத் தொடர்புகளை ஒழுங்குறுத்துவதற்கான ஒரு முக்கிய கொள்கை ஆவணத்தின் அவசியத்தையும் வலியுறுத்தி நிற்கின்றது.


இந்த பதின்மூன்றாவது திருத்தம், சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நிதித் திறனுடைய ஒரு விடயம், மாகாண சபைகளினால் நிறைவேற்றப்படுதல் வேண்டும் எனக் குறிப்பீடு செய்வதன் மூலம் அதிகாரப் பரவலாக்கப்பட்ட ஒரு மாகாண ஆட்சி முறைமையைத் தோற்றுவித்தது. அத்தகைய திறன் உள்ளடக்க விடயம் பொறுப்புக்கள் நிலையத்தினதும் (ஒதுக்கப்பட்ட பட்டியல்) மாகாணத்தினதும் (மாகாணப் பட்டியல்) மற்றும் ஒன்றோடொன்றிணைந்த ஒரு பொறுப்புக்கள் பிரிவினதும் (இணக்கப் பட்டியல்) வரையறைகளினூடாகக் குறிப்பீடு செய்யப் பட்டது.  

மாகாண விடயங்களின் பட்டியல், மிக விசாலமானது என்பதுடன் பொதுக் கட்டளை, கல்வியும் கல்வி சார்ந்த சேவைகளும், உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண வீடமைப்பும் நிர்மாணமும், வீதிகளும் பாலங்களும் மற்றும் இறங்குதுறைகளும், சமூக சேவைகளும் புனர்வாழ்வும், விவசாயமும் விவசாயம் சார்ந்த சேவைகளும், கிராமிய அபிவிருத்தி, சுகாதாரம், சுதேசிய மருத்துவம், உணவுகள் விநியோகமும் பகிர்ந்தளிப்பும், கூட்டுறவு விவகாரங்கள், காணி, நீர்ப்பாசனம், விலங்கு வளர்ப்பு, பொழுதுபோக்கும் விளையாட்டுக்களும், பந்தயங்களும் சூதாட்டங்களும் முதலியன போன்ற விடயங்களையும் (முக்கியமாக தேசிய அல்லது மாகாணங்களுக்கு இடையிலான செயற்பாடுகள் நீங்கிய குறிப்பீடு செய்யப்பட்ட வரை யறைகளினுள்) உள்ளடக்குகின்றது.

மாகாணப் பட்டியலானது, மாகாண சபைகளுக்கு அவ்வாறு குறித்தொதுக்கப்பட்ட செலவினப் பொறுப்புக்களுக்கான நிதியை ஈடுசெய்வதற்குரிய வருமான மூலலங்களின் விடயங்களையும் கூட்டிணைக்கின்றது. மாகாணங்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்திற்கான போதிய நிதிகள் (மேலதிக) போன்ற ஆண்டு வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து நிதிகளை ஒதுக்குமாறு குறித்த அரசியலமைப்பு அரசாங்கத்தைத் தேவைப்படுத்துகின்றது.