திணைக்களத்தின் முதலாவது பணி அநுராதபுரத்தைப் பாதுகாக்கும் திட்டத்தைப் பூர்த்தி செய்வதாகும். இந்த திட்டம் புனித பிரதேசம் மற்றும் புதிய நகரம் என்ற இரு பகுதிகளைக் கொண்டிருந்தது.
ஆரம்ப கட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஏனைய திட்டங்களாவன
- கொழும்பு பிரதான திட்டம் (பெட்றிக் அபர்குரொம்பியுடன்)
- பொலனறுவை புதிய பட்;டண திட்டம்
- பேராதெனிய பல்கலைக்கழக பிரதேசத்தை உள்ளடக்கும் கண்டி பிராந்திய திட்டம்.
அநுராதபுர புனித பிரதேச திட்டத்திற்காக 1986ஆம் ஆண்டு அரசாங்கம் 170 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 2002ஆம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட இப் பணத் தொகை புனித நகரத்தில் வாழ்ந்த 1500 குடும்பங்களை தேவநம்பியதிஸ்ஸபுர என்றழைக்கப்படும் இடத்தில் மீளக் குடியமர்த்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு அமைவாக குருணாகல் சந்தி என்றழைக்கப்படும் பிரதேசம் புனித நகர நடவடிக்கைகளுக்காக முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டது. அதற்கு மேலதிகமாக மஹியங்கன, தம்புல்ல, கதிர்காமம், சேருவாவில, தெவிநுவர, களனி, முதியங்கன, தொலுவில, முன்னேஸ்வரம் மற்றும் ஏனைய புனித பிரதேசங்களுக்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அமுலாக்கப்பட்டன.
மேலும் இந்தக் கட்டளைச் சட்டம் எந்தப் பிரதேசத்தையும் நகர அபிவிருத்தி பிரதேசமாக அதன் அமைவிடத்தில் பிரகடனப்படுத்துவதற்கு அல்லது உதவுவதற்கு திணைக்களத்திற்கு உதவுகிறது.
அதன் பிரகாரம் பட்;டண திட்டமிடல் நாடு முழுவதிலும் செயற்படுத்தப்பட்டது. புனித பிரதேசங்களைச் சுற்றியுள்ள நகரங்களை மாத்திரமல்ல மாளிகாவத்த வீடமைப்பு திட்டம் போன்றவற்றிலும் சிறிய பட்;டணங்களிலும் சனசமூக நிலைய கட்டிடங்களை அமைப்பதையும் செயற்படுத்தியது.
1972ஆம் ஆண்டு அரசாங்கம் ருNனுP உதவியைப் பயன்படுத்தி கொழும்பு மற்றும் அதன் சுற்றயல் பிரதேசங்களுக்கான திட்டங்களைத் தயாரிக்கும்படி திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியது. அதற்கு அமைவாக கொழும்பு மாஸ்டர் திட்டம் என்ற விசேட பிரிவு திணைக்களத்தில் நிறுவப்பட்டது. திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட திட்டத்தை செயற்படுத்துவதற்காக 1978ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது. கொழும்புக்கு மேலதிகமாக, அனைத்து மாநகர சபைகளும் நகர சபைகளும் நகர அபிவிருத்தி அதிகார சபையால் பிரகடனப்படுத்தப்பட்டன. அத்துடன் அதற்கு வெளியில் உள்ள சில பிரதேசங்கள் நகர அபிவிருத்தி பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டன.
அதற்கு அமைவாக, திணைக்களத்தின் வகிபாகம் 1980 முதல் 2000ஆம் ஆண்டு வரை பின்வருவனவற்றிற்கு வரையறுக்கப்பட்டது.
- நகர அபிலிருத்தி அதிகார சபையால் பிரகடனப்படுத்தப்படாத சிறிய பட்;டணங்களுக்கு கட்டிட திட்டங்களையும் பட்;டண திட்டங்களையும் தயாரிப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்குதல்.
- கம்முதாவ (தேசத்தின் எழுச்சி) கண்காட்சி தளங்களைத் திட்டமிடுதல், நிர்மாணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்
- புனித நகர திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அந்தத் திட்டங்களை அரசாங்கம் வழங்குகின்ற நிதி உதவியுடன் செயற்படுத்துதல்.
தேசிய பௌதிக திட்டத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் புரிந்து கொண்டதால் தேசிய பௌதிக திட்டத்தை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு அனுமதியளிப்பதற்கு வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைக்கு அமைவாக பட்;டண மற்றும் கிராமிய திட்டமிடல் கட்டளைச்சட்டம் 2000ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.
1946ஆம் ஆண்டின் கட்டளைச்சட்டத்தில் முழு நாட்டையும் உள்ளடக்குவதற்கு தேசிய காணி பயன்பாட்டு கொள்கையை வடிவமைப்பதற்குத் தேவைப்படும் வாசகம் சேர்க்கப்பட்டது. ஆனால்; 2000ஆம் ஆண்டு சட்டத்தின் ஏற்பாடுகள் தேசிய பௌதிக திட்டங்களை வடிவமைப்பதற்கு சட்ட நடவடிக்கைமுறையை வழங்குவதற்காக சட்டமாக்கப்பட்டது. எவ்வாறாயினும் கட்டளைச்சட்டத்தின் பெரும்பாலான ஏனைய செயற்பாடுகள் மாற்றமின்றி இருக்கின்றன. 2000ஆம் ஆண்டிலிருந்து திணைக்களம் செய்த மிகப்பெரிய பணி தேசிய பௌதிக திட்டத்தை அது (2007) தயாரித்ததாகும். அத்துடன் மீளத் திருத்தப்பட்டது (2019) அதனோடு சேர்த்து பல பிராந்திய பௌதிக திட்டங்களும் அநேகமான உள்ளூர் பௌதிக திட்டங்களும் தயாரிக்கப்பட்டன.