தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களம் (NPPனு) பட்டணம் மற்றும் கிராமிய திட்டமிடல் திணைக்களத்தின் பின்னுரிமையாளராக இருக்கின்றது. இது 1946ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க பட்டணம் மற்றும் கிராமிய திட்டமிடல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. இந்தக் கட்டளைச்சட்டம் 2000ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டு தேசிய பௌதிக கொள்கையை உருவாக்குவதற்கும் தேசிய பௌதிக திட்டத்தைத் தயாரிப்பதற்கும் மூல சட்டவாக்கத்தின் ஏற்பாடுகளின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டது. இதன்போது திணைக்களத்தின் தலைப்பு மாற்றப்பட்டது. 2000ஆம் ஆண்டிலிருந்து திணைக்களத்தின் பிரதான நடவடிக்கைகள் தேசிய பௌதிக திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய மட்ட திட்டமிடல் மற்றும் பிராந்திய மற்றும் உள்ளூர் மட்ட திட்டங்களைச் சுற்றி சுழன்றது. மேலும் இந்த திணைக்களம் முன்னாள் பட்டணம் மற்றும் கிராமிய திட்டமிடல் திணைக்களத்தின் எஞ்சியிருந்த வேலைகளை குறிப்பாக புனித பிரதேசங்களைத் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்தது.

இந்த சட்டத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்துடன் (இது 2000ஆம் ஆண்டு திருத்தப்பட்டது) இணைத்து மேற்கொண்ட பகுப்பாய்வில் இந்த திணைக்களம் தேசிய, பிராந்திய மற்றும் உள்ளூர் மட்டத்தில் ஒட்டுமொத்த நாட்டின் திட்டமிடலுக்கும் அதே நேரத்தில் தேசிய மட்டத்தில் நேரடியாக 'பௌதிக திட்டமிடலுக்கும்' பொறுப்புக் கூறுகின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திணைக்களம் பிராந்திய மட்டத்தில் திட்டமிடலை ஒழுங்கு செய்வதற்கும் (பிராந்திய திட்டமிடல் குழுக்கள் ஊடாக) மற்றும் உள்ளூர் மட்டத்தில் (உள்ளூர் அதகாரசபை தலைவர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக) ஒழுங்கு செய்வதற்கும் பொறுப்பு வகிக்கிறது.

தூரநோக்கு

நன்கு பாதுகாக்கப்பட்ட அழகிய நிலத்தின் வழிகாட்டி

பணிக்கூற்று

தேசிய பௌதீக கொள்கைகள், திட்டங்கள் மற்றும் உபாய வழிமுறைகளினை தயாரித்தல் மற்றும் இலங்கையில் மற்றும் கடல் எல்லைக்கு உரிய  பிரதேசங்களில் பொருளாதார, சமூக,பௌதீக மற்றும் சுற்றாடல் பிரிவுகளில் ஒன்றிணைந்த திட்டத்தினை முறைமையாக ஏற்படுத்தல் மற்றும்  முன்னேற்றும் நோக்கத்துடன், மாகாணங்கள் மற்றும் பிரதேச திட்டங்கள் மூலம்  அவ் தேசிய கொள்கைகள் மற்றும் திட்டங்களினை நடைமுறைக்கு உட்படுத்தலினை உறுதிப்படுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல்

செயற்பாடுகள்

  • தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கையை வடிவமைத்தல்
  • தேசிய பௌதிக திட்டத்தைத் தயாரித்தல்
  • பிராந்திய அல்லது உள்ளூர் பௌதிக திட்டமிடல் அதிகார சபை ஏற்றுக்கொள்ளுவதற்கு
  • பௌதிக திட்டமிடல் வழிகாட்டலைத் தயாரித்தல்.
  • பிராந்திய அல்லது உள்ளூர் பௌதிக திட்டமிடல் அதிகார சபை தோல்வியடையும் பட்சத்தில்
  • அல்லது கோரிக்கை விடுக்கும்போது பிராந்திய அல்லது உள்ளூர் பௌதிக திட்டத்தைத் தயாரித்தல்.
  • பிராந்திய பௌதிக திட்டத்தைத் தயாரிப்பதற்கு மகாணசபைகளுக்கு உதவுதல்.
  • பௌதிக திட்டங்கள் பற்றி அமைச்சுகளுக்கு இடையிலான இணைப்பாக்க குழுக்களுக்கு பரிந்துரைகளை செய்தல்.
  • தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கை, திட்டம் மற்றும் மூலோபாயங்களை செயற்படுத்துவதை ஒழுங்கான இடைவெளியில் பரிசோதித்தல் மற்றும் மீளாய்வு செய்தல்.
  • தேசிய பௌதிக திட்டத்தின் அமுலாக்கத்தை கண்காணித்தல்.
  • அனைத்து நடவடிக்கைகளில் அமைச்சுகளுக்கு இடையிலான இணைப்பாக்க குழுக்களுக்கும் பேரவைகளுக்கும் உதவுதல்.

சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவும் உரிய நேரத்தில் ஈடுபடுவதற்கும் திணைக்களத்திற்கு கடப்பாடுள்ள பிரதான ஆறு செயல்கள் கீழே தரப்பட்டுள்ளன:

  • தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கை மற்றும் திட்டம் என்பவற்றைத் திருத்துதுல்
  • பிராந்தியÆமகாண பௌதிக திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் திருத்துதல்
  • சிறிய பட்டணங்களுக்கு திட்டங்களைத் தயாரித்தல், இற்றைப்படுத்தல் மற்றும் அமுலாக்குதல்
  • தேசிய ரீதியாக தனிச் சிறப்புவாய்ந்த பிரதேசங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் செயற்படுத்துதல்
  • புனித பிரதேசங்களுக்காக அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துதல் மற்றும் இற்றைப்படுத்துதல்
  • மத ஸ்தலங்கள் மற்றும் நிறுவகங்களின் பௌதிக அபிவிருத்திக்காக தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல்;