11 

  Hon. Prasanna Ranatunga
 Minister of Urban   Development   and  Housing  

 

13

   Hon. Thenuka Vidanagamage
  State Minister of Urban Development and Housing

11  Hon. Arundika Fernando
 State Minister of Urban Development and Housing

 

13  

Mr. W.S. Sathyananda
 Secretary
 Ministry of Urban Development and Housing

 

 

 

 

 

   
   

இராஜாங்க அமைச்சுகள்

history01
1942ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அநுராதபுர பாதுகாப்பு கட்டளைச் சட்டம், இலங்கையில் அடையாளம் காணப்பட்ட எந்தப் பிரதேசத்திற்கும் திட்டங்களைத் தயாரிபதற்கும் செயற்படுத்துவதற்கும் முன்வைக்கப்பட்ட முதலாவது சட்ட கவசமாகக் கருதப்படுகிறதுÉ அநேகமாக உலகில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்கும் முதலாவது சட்டவாக்கம் இதுவாகும். 1946ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க பட்டண மற்றும் கிராமிய திட்டமிடல் கட்டளைச் சட்டத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட பட்;டண மற்றும் கிராமிய திட்டமிடல் திணைக்களத்தின் முதலாவது அரசாங்க பட்டண திட்டமிடுநராக நியமிக்கப்பட்ட கட்டிடக்கலைஞர்Æதிட்டமிடுநர் ஒலிவர் வீரசிங்க அவர்களிடம் பேணிக்காக்கும் திட்டத்தைத் தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.

history01திணைக்களத்தின் முதலாவது பணி அநுராதபுரத்தைப் பாதுகாக்கும் திட்டத்தைப் பூர்த்தி செய்வதாகும். இந்த திட்டம் புனித பிரதேசம் மற்றும் புதிய நகரம் என்ற இரு பகுதிகளைக் கொண்டிருந்தது.

ஆரம்ப கட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஏனைய திட்டங்களாவன

  • கொழும்பு பிரதான திட்டம் (பெட்றிக் அபர்குரொம்பியுடன்)
  • பொலனறுவை புதிய பட்;டண திட்டம்
  • பேராதெனிய பல்கலைக்கழக பிரதேசத்தை உள்ளடக்கும் கண்டி பிராந்திய திட்டம்.

history03

அநுராதபுர புனித பிரதேச திட்டத்திற்காக 1986ஆம் ஆண்டு அரசாங்கம் 170 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 2002ஆம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட இப் பணத் தொகை புனித நகரத்தில் வாழ்ந்த 1500 குடும்பங்களை தேவநம்பியதிஸ்ஸபுர என்றழைக்கப்படும் இடத்தில் மீளக் குடியமர்த்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு அமைவாக குருணாகல் சந்தி என்றழைக்கப்படும் பிரதேசம் புனித நகர நடவடிக்கைகளுக்காக முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டது. அதற்கு மேலதிகமாக மஹியங்கன, தம்புல்ல, கதிர்காமம், சேருவாவில, தெவிநுவர, களனி, முதியங்கன, தொலுவில, முன்னேஸ்வரம் மற்றும் ஏனைய புனித பிரதேசங்களுக்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அமுலாக்கப்பட்டன.

மேலும் இந்தக் கட்டளைச் சட்டம் எந்தப் பிரதேசத்தையும் நகர அபிவிருத்தி பிரதேசமாக அதன் அமைவிடத்தில் பிரகடனப்படுத்துவதற்கு அல்லது உதவுவதற்கு திணைக்களத்திற்கு உதவுகிறது.

அதன் பிரகாரம் பட்;டண திட்டமிடல் நாடு முழுவதிலும் செயற்படுத்தப்பட்டது. புனித பிரதேசங்களைச் சுற்றியுள்ள நகரங்களை மாத்திரமல்ல மாளிகாவத்த வீடமைப்பு திட்டம் போன்றவற்றிலும் சிறிய பட்;டணங்களிலும் சனசமூக நிலைய கட்டிடங்களை அமைப்பதையும் செயற்படுத்தியது.

history05 history06

history04

1972ஆம் ஆண்டு அரசாங்கம் ருNனுP உதவியைப் பயன்படுத்தி கொழும்பு மற்றும் அதன் சுற்றயல் பிரதேசங்களுக்கான திட்டங்களைத் தயாரிக்கும்படி திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியது. அதற்கு அமைவாக கொழும்பு மாஸ்டர் திட்டம் என்ற விசேட பிரிவு திணைக்களத்தில் நிறுவப்பட்டது. திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட திட்டத்தை செயற்படுத்துவதற்காக 1978ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது. கொழும்புக்கு மேலதிகமாக, அனைத்து மாநகர சபைகளும் நகர சபைகளும் நகர அபிவிருத்தி அதிகார சபையால் பிரகடனப்படுத்தப்பட்டன. அத்துடன் அதற்கு வெளியில் உள்ள சில பிரதேசங்கள் நகர அபிவிருத்தி பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டன.

அதற்கு அமைவாக, திணைக்களத்தின் வகிபாகம் 1980 முதல் 2000ஆம் ஆண்டு வரை பின்வருவனவற்றிற்கு வரையறுக்கப்பட்டது.

  • நகர அபிலிருத்தி அதிகார சபையால் பிரகடனப்படுத்தப்படாத சிறிய பட்;டணங்களுக்கு கட்டிட திட்டங்களையும் பட்;டண திட்டங்களையும் தயாரிப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்குதல்.
  • கம்முதாவ (தேசத்தின் எழுச்சி) கண்காட்சி தளங்களைத் திட்டமிடுதல், நிர்மாணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்
  • புனித நகர திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அந்தத் திட்டங்களை அரசாங்கம் வழங்குகின்ற நிதி உதவியுடன் செயற்படுத்துதல்.

தேசிய பௌதிக திட்டத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் புரிந்து கொண்டதால் தேசிய பௌதிக திட்டத்தை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு அனுமதியளிப்பதற்கு வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைக்கு அமைவாக பட்;டண மற்றும் கிராமிய திட்டமிடல் கட்டளைச்சட்டம் 2000ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.

1946ஆம் ஆண்டின் கட்டளைச்சட்டத்தில் முழு நாட்டையும் உள்ளடக்குவதற்கு தேசிய காணி பயன்பாட்டு கொள்கையை வடிவமைப்பதற்குத் தேவைப்படும் வாசகம் சேர்க்கப்பட்டது. ஆனால்; 2000ஆம் ஆண்டு சட்டத்தின் ஏற்பாடுகள் தேசிய பௌதிக திட்டங்களை வடிவமைப்பதற்கு சட்ட நடவடிக்கைமுறையை வழங்குவதற்காக சட்டமாக்கப்பட்டது. எவ்வாறாயினும் கட்டளைச்சட்டத்தின் பெரும்பாலான ஏனைய செயற்பாடுகள் மாற்றமின்றி இருக்கின்றன. 2000ஆம் ஆண்டிலிருந்து திணைக்களம் செய்த மிகப்பெரிய பணி தேசிய பௌதிக திட்டத்தை அது (2007) தயாரித்ததாகும். அத்துடன் மீளத் திருத்தப்பட்டது (2019) அதனோடு சேர்த்து பல பிராந்திய பௌதிக திட்டங்களும் அநேகமான உள்ளூர் பௌதிக திட்டங்களும் தயாரிக்கப்பட்டன.

 

பணிப்பாளர் நாயகம்

dg

திரு காமினி ஹேவகே
பணிப்பாளர் நாயகம்

   

மேலதிக பணிப்பாளர் நாயகம்

none
மேலதிக பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்)
adg
பொறியிலாளர் சி. குலரத்ன

மேலதிக பணிப்பாளர் நாயகம் (அமுலாக்கல்) (பதிற் கடமை)

பணிப்பாளர்கள்

    dir fin
திருமதி ஏ.எல்.டீ.குமாரி

பணிப்பாளர் (நிதி)
adg பொறியிலாளர் சி. குலரத்ன
பணிப்பாளர் (பொறியியல்)
dir arch கட்டிடக்கலைஞர் திலக் ரத்நாயக்க
பணிப்பாளர் (கட்டிடக்கலை)
cia செல்வி சுஜானி யசரத்ன
பிரதம உள்ளக கணக்காய்வாளர்
none பணிப்பாளர் (ஆராய்ச்சி)
none பணிப்பாளர் (பிராந்திய திட்டமிடல்) none பணிப்பாளர் (உள்ளூர் திட்டமிடல்)
none பணிப்பாளர் இணைப்பாக்கம் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல்    

பிரதி / உதவிப் பணிப்பாளர்கள்

 

 

ad priyani  கட்டிடக்கலைஞர் பிறியானி அத்துரலியே
உதவிப் பணிப்பாளர் (கட்டிடக்கலை)
assi dir eng பொறியியலாளர் டிமாலி ரத்நாயக்க
உதவிப் பணிப்பாளர் (பொறியியல்)
lahiru பொறியிலாளர் எம்.எம்.எல்.பிரேமசந்திர
உதவிப் பணிப்பாளர் (பொறியியல்)
ad chandana திரு எஸ்.சி.அதுகோரல
Aஉதவிப் பணிப்பாளர் (ஊ.ரு) வரைதல் அலுவலக நிர்வாகி
ad apsara திருமதி எம்.ஜி.ஏ.எஸ்.ரணசிங்க
உதவிப் பணிப்பாளர் (ஊ.ரு) பிரதம பரிசோதகர் (ளுடுவுளு அதிசிறப்பு)
ad sumith திட்டமிடுநர் (கலாநிதி)டீ.எஸ்.என்.சமரதுங்க
உதவிப் பணிப்பாளர் (ஊ.ரு)

திட்டமிடல் அணி

plnr nilika
திட்டமிடுநர் ஏ.பி.என்.நாலிகா பட்டுவத்தே

திட்டமிடுநர் ஏ.யு.ஜயவர்தன
திருமதி. அஜந்தா திசாநாயக்க திட்டமிடுநர் பீ.சி.கே.விக்கிரமசிங்க
plnr chathurangani திருமதி. சதுராங்கனி அமரசேகர ad sumith திட்டமிடுநர் (கலாநிதி) டீ.எஸ்.என்.சமரதுங்க
neel திரு ஜி.எம்.என்.எஸ். கஜநாயக்க chamila திட்டமிடுநர் எச்.எல்.சமிலா
janitha திட்டமிடுநர் ஜே.ஆர்.டப்ளியு.பொன்னம்பெரும plnr jayanayake திட்டமிடுநர் கே.ஏ.ஐ.டி.ஜயநாயக்க
plnr shanika திட்டமிடுநர் எல்.எச்.சானிக்கா டில்ஹானி கட்டிடக்கலைஞர் லசந்தி அமரசேகர
plnr piyas திட்டமிடுநர் எம்.ஏ.எம். பியாஸ் plnr gayani திட்டமிடுநர் எம்.டீ.ஜி.எம்.சிறிவர்தன
செல்வி மாதவி பண்டிதரத்ன plnr nawodya திட்டமிடுநர் என்.எம்.என்.ஜி.நவரத்ன
plnr nilani திட்டமிடுநர் நிலானி எதிரிசிங்க plnr nuwanthi திட்டமிடுநர் நுவந்திகா ரணவீர
திட்டமிடுநர் பி.எம்.கே.ஆர்.அபேரத்ன திட்டமிடுநர் ஆர்.எம்.அனுசா குசும்
திட்டமிடுநர் ஆர்.எம்.என்.எம்.ராஜபக்ஷ plnr thushani திட்டமிடுநர் விதாரண துசானி
plnr sonali திட்டமிடுநர் யு.எல்.டீ. சொனாலி டிலங்கா plnr upesha திட்டமிடுநர் உபேக்கா டீ. கோட்டகே
plnr lasantha திட்டமிடுநர் டப்ளியு.எல்.ஆர்.அமரதுங்க    

ஏனைய பணியாட் தொகுதியினர்


திருமதி.எல்;.கே.நிரோசினி
நிர்வாக உத்தியோகத்தர் (பதிற் கடமை) ஆளுழு
ito
திருமதி டீ.விந்தியா ஹெசானி திசாநாயக்க
தகவல் தொழில்நுட்ப அதிகாரி
ajantha திருமதி ஜி.எச்.ஈ.எம்.ஏ.மொலகொட
வரைதல் அலுவலக நிர்வாகி
(இலங்கை தொழில்நுட்ப சேவை)
திருமதி என்.எல்கிரியே
ஆவண வரைவாளர்;
(இலங்கை தொழில்நுட்ப சேவை- தரம் I)
திருமதி எ.ஜி.ரேனுகா குமாரி
ஆவண வரைவாளர்
(இலங்கை தொழில்நுட்ப சேவை- தரம் I)
செல்வி கே.டீ.எச்.தம்மிகா நயனா த சில்வா
ஆவண வரைவாளர்
(இலங்கை தொழில்நுட்ப சேவை- தரம் I)
திருமதி போஜானி கம்புறுவல
ஆவண வரைவாளர்
(இலங்கை தொழில்நுட்ப சேவை- தரம் I)
dilan திரு. கே. எல். டீ. ஆர். ஐ. தில்ஹான்
ஆவண வரைவாளர்
(இலங்கை தொழில்நுட்ப சேவை)
எஸ்.எச்.பதும்சா லக்மாலி
ஆவண வரைவாளர்
alwis செல்வி ஏ.ஆர்.கே.அல்விஸ்
ஆவண வரைவாளர்
ஆர்.ஏ.டீ.சி. த அல்விஸ்
பரிசோதகர் (SLTS)
   

தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களம் (NPPனு) பட்டணம் மற்றும் கிராமிய திட்டமிடல் திணைக்களத்தின் பின்னுரிமையாளராக இருக்கின்றது. இது 1946ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க பட்டணம் மற்றும் கிராமிய திட்டமிடல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. இந்தக் கட்டளைச்சட்டம் 2000ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டு தேசிய பௌதிக கொள்கையை உருவாக்குவதற்கும் தேசிய பௌதிக திட்டத்தைத் தயாரிப்பதற்கும் மூல சட்டவாக்கத்தின் ஏற்பாடுகளின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டது. இதன்போது திணைக்களத்தின் தலைப்பு மாற்றப்பட்டது. 2000ஆம் ஆண்டிலிருந்து திணைக்களத்தின் பிரதான நடவடிக்கைகள் தேசிய பௌதிக திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய மட்ட திட்டமிடல் மற்றும் பிராந்திய மற்றும் உள்ளூர் மட்ட திட்டங்களைச் சுற்றி சுழன்றது. மேலும் இந்த திணைக்களம் முன்னாள் பட்டணம் மற்றும் கிராமிய திட்டமிடல் திணைக்களத்தின் எஞ்சியிருந்த வேலைகளை குறிப்பாக புனித பிரதேசங்களைத் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்தது.

இந்த சட்டத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்துடன் (இது 2000ஆம் ஆண்டு திருத்தப்பட்டது) இணைத்து மேற்கொண்ட பகுப்பாய்வில் இந்த திணைக்களம் தேசிய, பிராந்திய மற்றும் உள்ளூர் மட்டத்தில் ஒட்டுமொத்த நாட்டின் திட்டமிடலுக்கும் அதே நேரத்தில் தேசிய மட்டத்தில் நேரடியாக 'பௌதிக திட்டமிடலுக்கும்' பொறுப்புக் கூறுகின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திணைக்களம் பிராந்திய மட்டத்தில் திட்டமிடலை ஒழுங்கு செய்வதற்கும் (பிராந்திய திட்டமிடல் குழுக்கள் ஊடாக) மற்றும் உள்ளூர் மட்டத்தில் (உள்ளூர் அதகாரசபை தலைவர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக) ஒழுங்கு செய்வதற்கும் பொறுப்பு வகிக்கிறது.

தூரநோக்கு

நன்கு பாதுகாக்கப்பட்ட அழகிய நிலத்தின் வழிகாட்டி

பணிக்கூற்று

தேசிய பௌதீக கொள்கைகள், திட்டங்கள் மற்றும் உபாய வழிமுறைகளினை தயாரித்தல் மற்றும் இலங்கையில் மற்றும் கடல் எல்லைக்கு உரிய  பிரதேசங்களில் பொருளாதார, சமூக,பௌதீக மற்றும் சுற்றாடல் பிரிவுகளில் ஒன்றிணைந்த திட்டத்தினை முறைமையாக ஏற்படுத்தல் மற்றும்  முன்னேற்றும் நோக்கத்துடன், மாகாணங்கள் மற்றும் பிரதேச திட்டங்கள் மூலம்  அவ் தேசிய கொள்கைகள் மற்றும் திட்டங்களினை நடைமுறைக்கு உட்படுத்தலினை உறுதிப்படுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல்

செயற்பாடுகள்

  • தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கையை வடிவமைத்தல்
  • தேசிய பௌதிக திட்டத்தைத் தயாரித்தல்
  • பிராந்திய அல்லது உள்ளூர் பௌதிக திட்டமிடல் அதிகார சபை ஏற்றுக்கொள்ளுவதற்கு
  • பௌதிக திட்டமிடல் வழிகாட்டலைத் தயாரித்தல்.
  • பிராந்திய அல்லது உள்ளூர் பௌதிக திட்டமிடல் அதிகார சபை தோல்வியடையும் பட்சத்தில்
  • அல்லது கோரிக்கை விடுக்கும்போது பிராந்திய அல்லது உள்ளூர் பௌதிக திட்டத்தைத் தயாரித்தல்.
  • பிராந்திய பௌதிக திட்டத்தைத் தயாரிப்பதற்கு மகாணசபைகளுக்கு உதவுதல்.
  • பௌதிக திட்டங்கள் பற்றி அமைச்சுகளுக்கு இடையிலான இணைப்பாக்க குழுக்களுக்கு பரிந்துரைகளை செய்தல்.
  • தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கை, திட்டம் மற்றும் மூலோபாயங்களை செயற்படுத்துவதை ஒழுங்கான இடைவெளியில் பரிசோதித்தல் மற்றும் மீளாய்வு செய்தல்.
  • தேசிய பௌதிக திட்டத்தின் அமுலாக்கத்தை கண்காணித்தல்.
  • அனைத்து நடவடிக்கைகளில் அமைச்சுகளுக்கு இடையிலான இணைப்பாக்க குழுக்களுக்கும் பேரவைகளுக்கும் உதவுதல்.

சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவும் உரிய நேரத்தில் ஈடுபடுவதற்கும் திணைக்களத்திற்கு கடப்பாடுள்ள பிரதான ஆறு செயல்கள் கீழே தரப்பட்டுள்ளன:

  • தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கை மற்றும் திட்டம் என்பவற்றைத் திருத்துதுல்
  • பிராந்தியÆமகாண பௌதிக திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் திருத்துதல்
  • சிறிய பட்டணங்களுக்கு திட்டங்களைத் தயாரித்தல், இற்றைப்படுத்தல் மற்றும் அமுலாக்குதல்
  • தேசிய ரீதியாக தனிச் சிறப்புவாய்ந்த பிரதேசங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் செயற்படுத்துதல்
  • புனித பிரதேசங்களுக்காக அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துதல் மற்றும் இற்றைப்படுத்துதல்
  • மத ஸ்தலங்கள் மற்றும் நிறுவகங்களின் பௌதிக அபிவிருத்திக்காக தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல்;