தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கையும் திட்டமும் குறுகியகால, மத்தியகால மற்றும் நீண்டகால இலக்குகளை அடைய வேண்டியுள்ளது. நீண்டகால இலக்குகள் என்ற வகையில் மத்திய நீர்நிரப்பு பிரதேசம், காலநிலை மாற்றத்திற்கு வினைத்திறன் மிக்க வகையில் பதிலளித்தல், தேசிய அனர்த்தங்களைத் தணித்தல், நிலைபேறான நகரமயப்படுத்தல் நடவடிக்கைமுறை போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளன. மேற் குறிப்பிட்ட நீ;ண்டகால இலக்குகளை அடைவதற்காக தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தின் (NPPனு) ஆராய்ச்சி பிரிவு ஆராய்ச்சியையும் ஆழமான ஆய்வுகளையும் மேற்கொள்ளுகிறது.

இவற்றைத் தவிர, பௌதிக திட்டமிடலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு அமைப்புகளின் தீர்மானம் எடுப்பவர்களுக்குப் பயன்படக்கூடிய தேசிய திட்டமிடல் தகவல் தளமொன்றை தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தின் (NPPனு) ஆராய்ச்சி பிரிவின் கீழ் பராமரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.