விண்ணப்பதாரர் பின்வரும் விடயங்களை உள்ளடக்கி சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட பண வைப்பு பத்திரத்தின் மூலம் பணம் செலுத்தி (காசோலை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது) பத்தரமுல்லையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்திற்கு தொலைநகல் மூலம் அனுப்பியதன் பின்னர் ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும்.
- வங்கி - இலங்கை வங்கி
- கிளை - பத்தரமுல்லை
- கணக்கு இலக்கம் - 7042731
- கணக்கு வைத்திருப்பவரின் பெயரும் முகவரியும் - பணிப்பாளர் நாயகம், தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களம்
- வைப்புச் செய்பவரின் பெயரும் முகவரியும் - பண வைப்புப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடவும்.
- வைப்பாளரின் தே.அ.அ.இல.
தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தின் தொலைநகல் இலக்கம் - 011-2872061
விண்ணப்பதாரரின் அடையாள அட்டை இலக்கத்தை கட்டாயமாக பண வைப்புப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பதாரர் தங்குமிட வசதிகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கு முன்னர் சுற்றுலா பங்களாவை/புலதிஸி நிகேதனத்தை ஒதுக்கிக்கொள்ளும் விண்ணப்பப் படிவம் மற்றும் பண வைப்புப் பத்திரம் என்பவற்றன் மூலப் பிரதியைக் கட்டாயமாக குறித்த இடத்தின் பங்களா பொறுப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் பண வைப்புப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பெயரும் விண்ணப்பப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரரின் பெயரும் ஒரு நபருடையதாக இருக்க வேண்டும்.