• English
  • සිංහල
Increase size
Reset to Default
Decrease size
  • முகப்பு
  • எம்மை பற்றி
    • கண்ணோட்டம்
    • வரலாறு
    • நிறுவன கட்டமைப்பு
    • எங்கள் அணி
    • அமைச்சகம்
  • பதிவிறக்கம்
    • வெளியீடுகள்
    • சட்ட ஏற்பாடுகள்
    • வரைபடங்கள்
    • பிற ஆவணங்கள்
  • செய்தி & நிகழ்வு
  • காட்சிக்கூடம்
    • வீடியோ காட்சிக்கூடம்
    • பட காட்சிக்கூடம்
  • செயற்படும் நிகழ்ச்சித்திட்டங்கள்
  • Sitemap
  • தொடர்புகளுக்கு
    • விசாரணைகள்
    • வீடியோ காட்சிக்கூடம்
    • தகவல்

  • English
  • සිංහල
  • முகப்பு
  • எம்மை பற்றி
    • கண்ணோட்டம்
    • வரலாறு
    • நிறுவன கட்டமைப்பு
    • எங்கள் அணி
    • அமைச்சகம்
  • பதிவிறக்கம்
    • வெளியீடுகள்
    • சட்ட ஏற்பாடுகள்
    • வரைபடங்கள்
    • பிற ஆவணங்கள்
  • செய்தி & நிகழ்வு
  • காட்சிக்கூடம்
    • வீடியோ காட்சிக்கூடம்
    • பட காட்சிக்கூடம்
  • செயற்படும் நிகழ்ச்சித்திட்டங்கள்
  • Sitemap
  • தொடர்புகளுக்கு
    • விசாரணைகள்
    • வீடியோ காட்சிக்கூடம்
    • தகவல்

செயற்படும் நிகழ்ச்சித்திட்டங்கள்

தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கை மற்றும் திட்டம் என்பவற்றை இற்றைப்படுத்துதல்

தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கை மற்றும் திட்டம் என்பவற்றை இற்றைப்படுத்துதல்

தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கையையும் திட்டத்தையும் இற்றைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம். பல்வேறு துறைகளில் உள்ள கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதன் காரணமாக அவை நாட்டில் இடம் சார்ந்த கட்டமைப்பில் தாக்கமேற்படுத்துவதாலும் மூலோபாயத்தை அமுல்படுத்துவதை வலுப்படுத்த வேண்டியிருப்பதாலும், தொற்று நிலைக்கு எதிராக செயலாற்ற வேண்டியிருப்பதாலும் தற்பொழுதுள்ள தேசிய பௌதிக திட்டத்தை 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை ஆவணத்துடன் கூட்டிணைப்பதற்கும் தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கையையும் திட்டத்தையும் இற்றைப்படுத்துவது அவசியமாக இருக்கின்றது.

ongoing programes 2050

சிறிய பட்டிணங்கள் அபிவிருத்தி நிகழ்;ச்சித்திட்டம்

சிறிய பட்டிணங்கள் அபிவிருத்தி நிகழ்;ச்சித்திட்டம்

தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களம் (NPPD) நாடு முழுவதும் பரவியுள்ள இருபது சேவை நிலையங்களுக்காக உள்ளூர் பௌதிக திட்டங்களைத் தயாரிப்பதற்கு 'சிறு பட்;டண அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்' முன்னெடுக்கப்பட்டது. இது நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்படவில்லை. இந்த சேவை நிலையங்களுக்கிடையில் இரண்டு நிலையங்கள் 'கம சமங்க பிளிசந்தர' என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏனைய நிலையங்கள் ஒவ்வொரு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்ற திணைக்களத்தின் சம்பந்தப்பட்ட ஆணையாளர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆண்டின் முதல் காலாண்டில் தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களம் (NPPD) இருபது சேவை நிலையங்களில் திட்டங்களைத் தயாரிக்கும் ஆரம்ப பணியில் ஈடுபட்டது. கொவிட் தொற்று நிiமையின் கீழ் திணைக்களத்திற்கு திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு திட்டமிடுநர்களை சேவையில் அமர்த்த முடியவில்லை. அதனால் 2020ஆம் ஆணடுக்குள்; பின்வரும் ஏழு பட்;டண அபிவிருத்தி திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

'கம சமங்க பிளிசந்தர' என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட பட்டண நிலையங்கள்.

  • பின்னவல (இரத்தினபுரி மாவட்டம்)
  • ரஸ்ஸகல (இரத்தினபுரி மாவட்டம்)

உள்ளூராட்சி மன்ற திணைக்களத்தின் ஆணையாளர்களால் பரிந்துரை செய்யப்பட்ட பட்டண நிலையங்கள்.

  • பொல்பித்திகம (குருணாகல் மாவட்டம்)
  • அங்கும்புர (கண்டி மவாட்டம்)
  • வில்கமுவ (மாத்தளை மவாட்டம்)
  • தலகஸ்வௌ (காலி மாவட்டம்)
  • நாகொட (காலி மாவட்டம்)
  • எல்லேவௌ (பொலனறுவை மாவட்டம்)

பின்னவல பட்;டண அபிவிருத்தி திட்டம்

1 2 3 4 5

பொல்பித்திகம பட்;டண அபிவிருத்தி திட்டம்

6 7 8

லொலுகஸ்வௌ பட்டிணங்கள் அபிவிருத்தி நிகழ்;ச்சித்திட்டம்

லொலுகஸ்வௌ பட்டிணங்கள் அபிவிருத்தி நிகழ்;ச்சித்திட்டம்

பிரித்தானியர்கள் காலத்திலிருந்து முறைசாரா நடவடிக்கைகளுக்கும் குறித்த சில காரியங்களுக்கும் கவனம் செலுத்தியதால் அநுராதபுர புனித பிரதேசத்தைச் சுற்றியுள்ள பிரதேசம் பாதிக்கப்பட்டதனால் அநுராதபுர பட்;டணம் அபிவிருத்தி செய்யப்பட்டது. புனித பிரதேசத்தைப் பாதுகாப்பதற்காக, திட்டம் தயாரிப்பவர்களால் அனுராதபுரத்தைப் பாதுகாக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு, 1961ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க சட்டத்தினால் அநுராதபுரத்தைப் பாதுகாக்கும் சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் அநுராதபுரத்தைப் பாதுகாக்கும் சபையினால் அமுலாக்கப்பட்டது.

சட்டத்தினால் வழங்கப்பட்ட அதிகாரங்களும் கடமைகளும் சரியாக செயற்படுத்தப்படாததன் காரணமாக அநுராதபுரத்தைப் பாதுகாக்கும் சபை 1973ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அநுராதபுர புனித பிரதேசத்தை நகர்த்தும் திட்டம் பட்;டண மற்றும் கிராமிய திணைக்களத்தினால் (தற்போதைய தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களம் - NPPD) தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது.

மேலும் அநுராதபுர புனித பிரதேச திட்டமிடல் திட்டம் அநுராதபுர புனித பிரதேசத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்களை சுத்தப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அடையாளம் கண்டது. இந்தப் பிரதேசத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காணிகள் மகாவிஹாரை (ஸ்ரீ மகாபோதி, ருவன்வெலி தாதுகோபுரம், லொவமகா அபாய, தூபராம) ஜேதவனாராமய, அபயகிரிய, (லங்காராமய, குட்டம் பொகுன மற்றும் சமாதி சிலை உள்ளடங்களாக) தக்ஷpன தூப, மிரிஸ்ஸவெட்டிய மற்றும் புராதன கோட்டை என்பவை முழுமையாக அடங்கியிருந்தன. இதில் பெரும்பாலான பிரதேசங்களில் குடும்பங்கள் அகற்றப்பட்டு தேவநம்பியதிஸ்ஸ Iஇ II III மற்றும் ஐஏ. என்ற இடத்தில் தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தினால் - NPPD ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய குடியேற்றத் திட்டத்தில் குடியமர்த்தப்படுகின்றன.

கோட்டை (எதுல் நுவர) பிரதேசத்தில் வாழ்கின்ற எஞ்சியுள்ள குடியிருப்பாளர்கள் எதுல் நுவரவின் தொல்பொருளியல் பெறுமதிகளை அழிக்கின்றனர். அதனால், எதுல் நுவரவில் உள்ள குடும்பங்களை அங்கிருந்து அகற்றி அப் பிரதேசத்தை தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்த பிரதேசமாகப் பிரகடனப்படுத்தி கோட்டையைப் பாதுகாப்பதற்கும் அங்கு தொல்பொருளியல் அகழ்வாராய்ச்சி பணிகளை முன்னெடுப்பதற்கும் வசதிப்படுத்துவது முன்னுரிமையளிக்க வேண்டிய தேவை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், எதுல் நுவரவில் குடியமர்த்தப்படும் குடும்பங்கள் தொல்பொருளியல் ஒதுக்கத்தில் வாழ்வதன் காரணமாக அவர்களுக்கு நகர வசதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால், தொல்பொருளியல் அமைவிடங்களைப் பாதுகாப்பதையும் சுற்றுலா பயணிகளைக் கவர்வதையும் உறுதிப்படுத்துவதற்கு, எதுல் நுவரவில் வாழ்கின்ற குடும்பங்களை மீளக் குடியமர்த்துகின்ற லொலுகஸ்நுவர புதிய பட்;டண அபிவிருத்தி கருத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. புனித பிரதேசத்திற்கு அருகில் சகல நகர வசதிகளுடனும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு எவ்வித இடையூறுகளும் இல்லாமல் இந்தப் புதிய பட்;டண அபிவிருத்தி கருத்திட்டம் செயற்படுத்தப்படும்.

விவரங்கள்
பிரிவு: Uncategorised

எங்களை தொடர்பு கொள்ள

தொலைபேசி +94 11 207 7180
முகவரி 5th Floor,
Sethsiripaya, Battaramulla, Sri Lanka.
மின்னஞ்சல் nppd@sltnet.lk
சமூக ஊடகம்

தொடர்புடைய இணைப்புகள்

  • ஜனாதிபதி அலுவலகம்
  • பிரதமர் அலுவலகம்
  • ஜனாதிபதி செயலகம்
  • அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
  • Other Publications
பதிப்புரிமை © 2023 தேசியப் பெளதீகத் திட்டமிடல் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.
வடிவமைப்பு மற்றும் மேம்பாடு Procons Infotech
  • Last Modified: செவ்வாய்க்கிழமை 21 மார்ச் 2023.