லொலுகஸ்வௌ பட்டிணங்கள் அபிவிருத்தி நிகழ்;ச்சித்திட்டம்
பிரித்தானியர்கள் காலத்திலிருந்து முறைசாரா நடவடிக்கைகளுக்கும் குறித்த சில காரியங்களுக்கும் கவனம் செலுத்தியதால் அநுராதபுர புனித பிரதேசத்தைச் சுற்றியுள்ள பிரதேசம் பாதிக்கப்பட்டதனால் அநுராதபுர பட்;டணம் அபிவிருத்தி செய்யப்பட்டது. புனித பிரதேசத்தைப் பாதுகாப்பதற்காக, திட்டம் தயாரிப்பவர்களால் அனுராதபுரத்தைப் பாதுகாக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு, 1961ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க சட்டத்தினால் அநுராதபுரத்தைப் பாதுகாக்கும் சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் அநுராதபுரத்தைப் பாதுகாக்கும் சபையினால் அமுலாக்கப்பட்டது.
சட்டத்தினால் வழங்கப்பட்ட அதிகாரங்களும் கடமைகளும் சரியாக செயற்படுத்தப்படாததன் காரணமாக அநுராதபுரத்தைப் பாதுகாக்கும் சபை 1973ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அநுராதபுர புனித பிரதேசத்தை நகர்த்தும் திட்டம் பட்;டண மற்றும் கிராமிய திணைக்களத்தினால் (தற்போதைய தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களம் - NPPD) தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது.
மேலும் அநுராதபுர புனித பிரதேச திட்டமிடல் திட்டம் அநுராதபுர புனித பிரதேசத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்களை சுத்தப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அடையாளம் கண்டது. இந்தப் பிரதேசத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காணிகள் மகாவிஹாரை (ஸ்ரீ மகாபோதி, ருவன்வெலி தாதுகோபுரம், லொவமகா அபாய, தூபராம) ஜேதவனாராமய, அபயகிரிய, (லங்காராமய, குட்டம் பொகுன மற்றும் சமாதி சிலை உள்ளடங்களாக) தக்ஷpன தூப, மிரிஸ்ஸவெட்டிய மற்றும் புராதன கோட்டை என்பவை முழுமையாக அடங்கியிருந்தன. இதில் பெரும்பாலான பிரதேசங்களில் குடும்பங்கள் அகற்றப்பட்டு தேவநம்பியதிஸ்ஸ Iஇ II III மற்றும் ஐஏ. என்ற இடத்தில் தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தினால் - NPPD ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய குடியேற்றத் திட்டத்தில் குடியமர்த்தப்படுகின்றன.
கோட்டை (எதுல் நுவர) பிரதேசத்தில் வாழ்கின்ற எஞ்சியுள்ள குடியிருப்பாளர்கள் எதுல் நுவரவின் தொல்பொருளியல் பெறுமதிகளை அழிக்கின்றனர். அதனால், எதுல் நுவரவில் உள்ள குடும்பங்களை அங்கிருந்து அகற்றி அப் பிரதேசத்தை தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்த பிரதேசமாகப் பிரகடனப்படுத்தி கோட்டையைப் பாதுகாப்பதற்கும் அங்கு தொல்பொருளியல் அகழ்வாராய்ச்சி பணிகளை முன்னெடுப்பதற்கும் வசதிப்படுத்துவது முன்னுரிமையளிக்க வேண்டிய தேவை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், எதுல் நுவரவில் குடியமர்த்தப்படும் குடும்பங்கள் தொல்பொருளியல் ஒதுக்கத்தில் வாழ்வதன் காரணமாக அவர்களுக்கு நகர வசதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால், தொல்பொருளியல் அமைவிடங்களைப் பாதுகாப்பதையும் சுற்றுலா பயணிகளைக் கவர்வதையும் உறுதிப்படுத்துவதற்கு, எதுல் நுவரவில் வாழ்கின்ற குடும்பங்களை மீளக் குடியமர்த்துகின்ற லொலுகஸ்நுவர புதிய பட்;டண அபிவிருத்தி கருத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. புனித பிரதேசத்திற்கு அருகில் சகல நகர வசதிகளுடனும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு எவ்வித இடையூறுகளும் இல்லாமல் இந்தப் புதிய பட்;டண அபிவிருத்தி கருத்திட்டம் செயற்படுத்தப்படும்.